Notify Blogger about objectionable content.
What does this mean?
Send As SMS
BlogThis!
இணைந்து இருங்கள்
[Eurobird 9] Star Vijay TV has launched in Europe again on Eurobird 9A (9 degree East)
வடிவேலுக்கு ஐந்தாண்டு தடை
18 May 2011
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவுக்கு நிற்கக் கூட நேரமில்லை. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவு பிஸி.
ஆனால் இன்று, அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை. இனிவரும் நாட்களிலாவது இருக்குமா என்று பார்த்தால் அதுவும் சிரமம் தான்.
எல்லாம் இந்த தேர்தல் செய்த வேலை. தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்தை ஏகத்துக்கும் அவர் விமர்சித்தது தான் இத்தனைக்கும் காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினியே தனது படத்திலிருந்து வடிவேலுவை நீக்கிவிட, இப்போது அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் மதுரை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வைகைப் புயல்.
இந்த நிலையில் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சி செய்தியை அவருக்கு தெரிவித்துள்ளனர். அடுத்து வரும் 5 ஆண்டுகளிலும் புதுப்படங்கள் எதிலும் வடிவேலு நடிக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவாக முக்கிய சினிமா சங்கங்களுக்கு போடப்பட்டுள்ளதால் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்பு 2006 ல் நடந்த தேர்தல் பிரசாரத்தில், கருணாநிதியை தரக்குறைவாகப் பேசியதற்காக நடிகர் செந்திலையும் திரையுலகம் கடந்த 5 ஆண்டுகளில் கண்டுகொள்ளாமல் இருந்தது நினைவிருக்கலாம்.
posted by Norsri @
Wednesday, May 18, 2011
வைகைப்புயலின் வேகம்...
05 January 2009
வரப்போகும் புத்தாண்டு வடிவேலுவுக்கு இடி கொடுக்கும் போலிருக்கிறது. தினந்தோறும் 7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரேயடியாக 9 லட்சமாக உயர்த்திவிட்டாராம்.
அதிர்ந்து போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதையும் தர தயாராக இருக்கிற சிலருக்கும், வடிவேலுவின் தினப்படி ஷெட்யூல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதை மட்டுமாவது சீரமைக்கும்படி கேட்கிறார்களாம். காலை 11 மணிக்கு படப்பிடிப்புக்கு வரும் வடிவேலு, சரியாக ஒரு மணிக்கு லஞ்ச் பெல் அடித்துவிடுவாராம். அதன் பின் ஸ்பாட்டுக்கு வருவது 3 மணிக்குதானாம். மாலை ஆறு மணிக்கெல்லாம் இவருக்கு பேக்கப் சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டாலும், காரில் ஏறி போய் கொண்டேயிருப்பாராம். இந்த கால நேரத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டாலாவது பரவாயில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
எதற்கும் சம்மதிக்காத வடிவேலு தனது பிடிவாதத்தை தளர்த்த மறுப்பதால், வைகைப்புயலின் வாசல் படி மிதிக்கவே அஞ்சுகிறது திரையுலகம். விளைவு...? வில்லுவை தவிர வேறு படங்கள் எதுவும் கையில் இல்லை அண்ணாச்சிக்கு. சும்மாதானே இருக்கிறோம் என்று நினைத்திருப்பார் போல... சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளோடு போயிருக்கிறாராம்.
ஒருவேளை அரசியல் ஆசை பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ?
posted by Norsri @
Monday, January 05, 2009
நான் கடவுள்: பிரமிக்க வைக்கும் பாலா!
இத்தனை நாள் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார் இயக்குனர் பாலா. ஒரு மாதம், ஒரு வருடம் அல்ல... மூன்று நெடிய ஆண்டுகள்.
தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பெற்றிராத புதிய அனுபவத்தைத் தர வருகிறது பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள நான் கடவுள் திரைப்படம். இதுவரை அந்தப் படத்தின் ஒரு சில ஸ்டில்கள்தான் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. படம் முழுவதும் முடியும் வரை அமைதி காத்த பாலா, இப்போது தன் பிஆர்ஓ நிகில் முருகன் மூலம் வேண்டிய மட்டும் ஸ்டில்களை அனுப்பியுள்ளார். ஒவ்வொரு புகைப்படமும் பாலாவின் மீது பிரமிப்பையும், படத்தைப் பற்றிய எதிரிப்பார்ப்பையும் கூட்டுவதாக உள்ளன. இந்தப் படத்தின் கதாநாயகன் ஆர்யா. மொத்தம் 3 ஆண்டுகள் ஜடா முடியும், நெஞ்சைத் தொடும் தாடியுமாக ஒரு விரதம் போல காத்திருந்தார். எவ்வளவோ பேர் அவரை அதைரியப்படுத்தியும், பாலா மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக புதிய படங்களையும் ஒப்புக் கொள்ளவில்லை, தாடியையும் மழிக்கவில்லை. தன்னுடைய முதல் படம் இதுதான் என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன் என்கிறார் பெருமிதத்துடன். ராஜாவின் பிரமிப்பு!: படத்தின் முக்கியமான விஷயம், நமது இசைஞானியின் இசை. பாடல்களில் புதிய சாதனைப் படைத்திருக்கும் ராஜா, பின்னணி இசையில் பல காட்சிகளில் ஜெயமோகனின் வசனங்களுக்கு வேலை இல்லாமல் செய்திருக்கிறாராம். இந்தப் டத்தைப் பார்த்து பிரமித்துப் போன ராஜா, தன் விருப்பப்படி இசையமைக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படும் என்றாராம். அதுமட்டுமல்ல, பின்னணி இசையில் புதிய பரிமாணம் காட்ட பிரபல இந்தி இசையமைப்பாளர் உத்தம் சிங்கையும் (தில் தோ பாகல் ஹை இசையமைப்பாளர்) தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார். ஜனவரி 1ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் நான் கடவுள் இசையின் மூலம், 'நான் இசை' என உலகுக்கு அழுத்தமாக நிரூபிப்பார் ராஜா என்கிறார்கள் படக் குழுவினர். படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களும் இது ஒரு சர்வதேச தரத்தில் அமைந்துள்ள படம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கின்றனர். தசாவதாரத்தில் பெருமாளைப் புகழ்ந்து பாடல் புனைந்த வாலியின் பேனா, இந்தப் படத்தில் சிவனின் மகிமையைப் பாடலாக்கியிருக்கிறது. படத்தின் கதையை முன்கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளார் பாலா. மூட நம்பிக்கை காரணமாக தன் மகனை காசியில் அனாதையாக விட்டுவிட்டு வருகிறார் ஒரு தந்தை. அந்தச் சிறுவன் காசியில் சாதுக்களின் மத்தியில் ஜடாமுடியும், தாடியும் வைத்துக் கொண்டு ஒரு இளம் சாதுவாக வளர்கிறான். தன் தவறை உணர்ந்த தந்தை மீண்டும் மகனைத் தேடி காசிக்கு வருகிறார். மகனின் நிலையைக் கண்டு அதிர்ந்து போய், மீண்டும் அவனை தன்னுடன் ஊருக்குக் கூட்டிச் செல்ல முயல்கிறார். மகனும் தமிழ்நாட்டுக்கு வருகிறான்... அதன் பிறகு நடக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்தான் படம, அந்த இளைஞனை 'கடவுளாக' மாற்றுகின்றன! கடவுளை 'தரிசிக்க' காத்திருக்கிறோம் பாலா!
posted by Norsri @
Monday, January 05, 2009
நான் பாலாவின் ரசிகன் - மணிரத்னம்
மூன்று வருடங்களாக நான் கடவுள் படத்தின் மீது படிந்திருந்த எதிர்மறை விமர்சனங்களை துடைத்து எறிந்ததுடன், 2009 ஆம் ஆண்டின் புத்துணர்ச்சியூட்டும் விழாவாக அமைந்தது, நேற்று நடந்த நான் கடவுள் படத்தின் இசை வெளியீட்டு விழா.
படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய பிரமிப்பு மாறாமலே அனைவரும் பேசினர். பாலாவால் தனது சினிமா வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை மீண்டுமொருமுறை நினைவுகூர்ந்தார் சூர்யா. படத்தின் ட்ரெய்லர் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் பாலாவின் படத்தில் வித்தியாசம் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் என்றார், விக்ரம். பொதுவாக விழாக்களை தவிர்க்கும் மணிரத்னம், இந்த விழாவில் கலந்து கொண்டதுடன், மனம் திறந்து பாலாவை பாராட்டியது எதிர்பாராத நிகழ்வு. “நான் பாலாவின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்யராஜ் என்ற வரிசையில் அடுத்து பாலாதான். பாலா வந்த பிறகு தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. இதனை தொடர்ந்து செய்யுங்கள்” என்று பாராட்டினார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். பாலா சேதுவில் பதினாறடி பாய்ந்தார். நந்தாவில் முப்பத்தியிரண்டு அடி, பிதாமகனில் அறுபத்துநான்கு அடி, நான் கடவுளில் நூற்று இருபத்தியெட்டு அடி என்று நினைப்பீர்கள். ஆனால் அது கிடையாது. நூற்று இருபத்தியெட்டுடன் பல சைபர்களை சேர்க்க வேண்டியிருக்கும் என தனது சிஷ்யனை வாழ்த்தினார், பாலுமகேந்திரா. விழாவுக்கு வந்த விஐபி-களை மேடையில் அமரவைத்து பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார், பாலா. அவருடன் பார்வையாளர்கள் வரிசையில் காணப்பட்ட இன்னொருவர் படத்தின் வசனகர்த்தா, எழுத்தாளர் ஜெயமோகன். வருடத்தின் முதல்நாள் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டிய நிகழ்வாக பாலாவின் நான் கடவுள் இசை வெளியூட்டு விழா அமைந்ததை மறுப்பதற்கில்லை.
[ Friday, 02 January 2009, 05:44.17 PM GMT +05:30 ][ வெப்துனியா ]
மூன்று வருடங்களாக நான் கடவுள் படத்தின் மீது படிந்திருந்த எதிர்மறை விமர்சனங்களை துடைத்து எறிந்ததுடன், 2009 ஆம் ஆண்டின் புத்துணர்ச்சியூட்டும் விழாவாக அமைந்தது, நேற்று நடந்த நான் கடவுள் படத்தின் இசை வெளியீட்டு விழா.
படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய பிரமிப்பு மாறாமலே அனைவரும் பேசினர். பாலாவால் தனது சினிமா வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை மீண்டுமொருமுறை நினைவுகூர்ந்தார் சூர்யா. படத்தின் ட்ரெய்லர் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் பாலாவின் படத்தில் வித்தியாசம் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் என்றார், விக்ரம். பொதுவாக விழாக்களை தவிர்க்கும் மணிரத்னம், இந்த விழாவில் கலந்து கொண்டதுடன், மனம் திறந்து பாலாவை பாராட்டியது எதிர்பாராத நிகழ்வு. “நான் பாலாவின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்யராஜ் என்ற வரிசையில் அடுத்து பாலாதான். பாலா வந்த பிறகு தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. இதனை தொடர்ந்து செய்யுங்கள்” என்று பாராட்டினார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். பாலா சேதுவில் பதினாறடி பாய்ந்தார். நந்தாவில் முப்பத்தியிரண்டு அடி, பிதாமகனில் அறுபத்துநான்கு அடி, நான் கடவுளில் நூற்று இருபத்தியெட்டு அடி என்று நினைப்பீர்கள். ஆனால் அது கிடையாது. நூற்று இருபத்தியெட்டுடன் பல சைபர்களை சேர்க்க வேண்டியிருக்கும் என தனது சிஷ்யனை வாழ்த்தினார், பாலுமகேந்திரா. விழாவுக்கு வந்த விஐபி-களை மேடையில் அமரவைத்து பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார், பாலா. அவருடன் பார்வையாளர்கள் வரிசையில் காணப்பட்ட இன்னொருவர் படத்தின் வசனகர்த்தா, எழுத்தாளர் ஜெயமோகன். வருடத்தின் முதல்நாள் அனைவருக்கும் புத்துணர்ச்சியூட்டிய நிகழ்வாக பாலாவின் நான் கடவுள் இசை வெளியூட்டு விழா அமைந்ததை மறுப்பதற்கில்லை.
posted by Norsri @
Monday, January 05, 2009
05 December 2007
ரஜினியின் சுல்தான்!
'சிவாஜி' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், ரஜினியின் 'சுல்தான்' படத்தை 1,200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள்.உலக அளவில் வசூலில் பல சாதனைகள் படைத்த சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'சுல்தான்–தி வாரியர்'. இந்தியாவை ஆட்சி செய்த சுல்தானாக இதில் நடிக்கிறார் ரஜினி. வரலாற்றுப் படம் என்பதால் சுல்தானை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கி வருகிறார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பெல்ஜியம், பிரேஸில், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆறு வாரங்கள் நடந்தது. முதலில் ரஜினியை நடிக்க வைத்து பின்னர், அந்தக் காட்சிகளை அனிமேஷனுக்கு மாற்றும் வேலைகள் இதுவரை செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவில் நடந்தன.இப்போது, படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார் செளந்தர்யா. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த ரஜினி, மிகுந்த உற்சாகத்துடன் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.இதுகுறித்து செளந்தர்யா கூறுகையில், இதுவரை எடுத்துள்ள பகுதிகளைப் பார்த்து அப்பா மிகவும் சந்தோஷப்பட்டார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே என்னை மிகவும் உற்சாகப்படுத்தி வருபவர் அப்பாதான். அப்பாவை இன்னும் இளமையாக, புதிய ஸ்டைலில் இந்தப் படத்தில் பார்க்கலாம்.ஏற்கெனவே வெளியிடப்பட்ட சுல்தான் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதே வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் ஒருவரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் முதல் முழு நீள அனிமேஷன் படம் சுல்தான்தான்.இப்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறோம். அப்பா இதற்காக 20 நாட்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். இந்த முறை படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில்தான் என்றார்.ஏவி.எம் மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் இந்தப் படத்துக்காக பிரமாண்ட செட்கள் போடப்பட்டுள்ளன. க்ளைமாக்ஸில் ரஜினி பங்கேற்கும் போர்க்களக் காட்சிகளை லார்டு ஆஃப் த ரிங்ஸ்க்கு இணையாக அனிமேஷன் செய்யப் போகிறாராம் செளந்தர்யா.ஏற்கெனவே இந்தப் படத்துக்காக ஆறு பாடல்கள் போட்டுக் கொடுத்துவிட்டார் ரஹ்மான். ரஜினிக்கென்று ஸ்பெஷல் அறிமுகப் பாடலும் இதில் உண்டு.தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் செளந்தர்யா. சிவாஜியை மிஞ்சும் வகையில் உலகமெங்கும் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் இப்போதே சுல்தான் டிரெய்லர் காட்டப்படுகிறது. இதைவிட அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.
posted by Norsri @
Wednesday, December 05, 2007
மக்களுக்காகவே படம் இயக்குகிறேன்" - மணிரத்னம்
30 November 2007
கோவாவில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பேசிய இயக்குனர் மணிரத்னம், மக்களுக்காகவே படம் இயக்குகிறேன் என்றார்.
மணிரத்னம் என்றதும் அவர் படத்தில் இடம் பெறும் தொழில்நுட்பமே முதலில் நினைவு வரும். சர்வதேச படவிழாவில் மணிரத்னம் பேசியது இதற்கு நேர் எதிர்மறையாக இருந்தது.
கதையும், கதை சொல்லும் விதமும் சினிமாவில் முக்கியம் என்றார் அவர். வெறும் தொழில்நுட்பத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்றவர், நடிகர்களைவிட கதையே முக்கியம் என்றார்.
"நல்ல கதை அமைந்தாலும் அதை சிறப்பாக வெளிப்படுத்த திறமையுள்ள நடிகர்கள் தேவை. எனது 'உயிரே', 'இதயத்தை திருடாதே' நல்ல கதைதான் என்றாலும் இந்தியில் வெற்றி பெறவில்லை. இதற்கு கிளைமாக்ஸ் திருப்திகரமாக அமையாததே காரணம். இரண்டே கால் மணி நேரம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும் கடைசி 15 நிமிஷ கிளைமாக்ஸ் சரியில்லை என்றாலும் படம் ஒடாது" என்றார்.
விருது குறித்து பேசும் போது, ஆஸ்கார் முதற்கொண்டு எந்த விருதாலும் பயனில்லை என்றவர், நான் விருதுக்காக படம் எடுப்பதில்லை, மக்களுக்காகவே படம் இயக்குகிறேன் என்றார்.
posted by Norsri @
Friday, November 30, 2007
தசாவதாரம் பட பிரச்சினையில் என்னை வீழ்த்த கட்ட பஞ்சாயத்து: கமலஹாசன் பரபரப்பு அறிக்கை
16 April 2007
யாகவாராயினும், சத்திய மேவ ஜெயதே எனும் கூற்றுக்கு குந்தகம் விளையும் நிலை வரும்போது சட்டம் ஏவ ஜெயதே எனும் புது மொழியை நம்ப வேண்டி வருகிறது. அவ்வாறே நம்பி உண்மை அடிபடாமலிருக்க சட்டத்திடம் உதவி கேட்டேன். சட்டம் என்னையும், தன்னையும் காத்து நின்றது.மனசாட்சிக்கு பணிந்து வாழும் கலைஞர்களை வாழ்த்த உள்ள கூட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தவும் நினைக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் இருப்பது என் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. அதுவும் திரை உலகத்தை சார்ந்த சில பழைய நண்பர்களே இந்த அவதூறு வழக்கிற்குப் பின்னால் இருந்திருக்கக் கூடும் என்ற என் சந்தேகம் வலுத்தது. சந்தேகம் மெய்ப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளது.முக்கியமாக தசாவதாரம் தயாரிப்பாளர்களிடம் சில மாதங்களுக்கு முன் ஒரு திரை எழுத்தாளர் வந்து உங்களுக்கு எதிரா கேஸ் குடுத்தானே பையன், அவன் நம்ம ஆளுதான் கேசை வாபஸ் வாங்கச் சொல்லி சமரசம் செஞ்சி வைக்கனும்னா நம்ம கிட்ட சொல்லுங்க நம்ம சாதிக்காரப்பையன்தான் என்று சொன்னதாய் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்னிடமும், கே.எஸ்.ரவிக்குமாரிடமும் சொன்னதும் நான் அதிர்ந்து போனேன்.நல்ல வேளையாக அத்தகைய கட்டப்பஞ்சாயத்தில் எல்லாம் சம்மந்தப்படாமல் சட்டப்படி எங்கள் தரப்பு உண்மையை நாங்கள் காத்துக் கொள்ள முடிவெடுத்தது எங்கள் புத்திசாலித்தனம் மட்டும் அல்ல நேர்மையும் கூட.சட்டத்தின் உதவியுடன் உண்மைவென்றே தீரும் என் பதற்கு இன்னும் ஓர் உதாரணம் காட்டிய நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் எங்கள் வணக்கங்கள். சட்டம் தன் வேலையைச் செய்யும் நல்ல தீர்ப்பளிக்கும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
posted by Norsri @
Monday, April 16, 2007
பெப்ரவரி 21 இல் இணைத் தலைமைகளின் தொலைத் தொடர்பு மாநாடு.
21 February 2007
இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான இணைத் தலைமைகளான அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இவ்வாரத்தின் முற்பகுதியில் தொலைத்தொடர்பு மாநாடொன்றை (Tele Conference) நடத்த விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறானதொரு மாநாடு நடைபெறவிருப்பதை இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அத்துடன், இந்த தொலைத் தொடர்பு மாநாடு அநேகமாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த நாட்களில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடிகளும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்து விட்டதாக சர்வதேச ஸ்தாபனங்கள் சுட்டிக்காட்டும் நிலைமையிலும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருட பூர்த்தியை நிறைவு செய்யவிருக்கும் தருணத்திலுமே இணைத்தலைமை நாடுகளின் இந்த விசேட மாநாடு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.போர் நிறுத்த உடன்படிக்கை 5 வயதை பூர்த்தி செய்யும் தினமான பெப்ரவரி 22 ஆம் திகதிக்கு முன்தினம் இம் மாநாடு நடைபெறவிருப்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இணைத் தலைமை நடுகளின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளின் தலை நகரங்களில் இருந்து சம நேரத்தில் தொலைத் தொடர்புகள் மூலம் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளன.இம் மாநாட்டில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் ஜொன் ஹன்சன் பௌர், அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், ஜப்பானின் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோர் தொலைத் தொடர்புகள் மூலம் நிலைமைகளை ஆராய விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதேநேரம், இம் மாநாட்டின் போது இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் பேச்சு மேசைக்கு வரவழைப்பதற்கு கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் குறித்து இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் தீவிர கவனம் செலுத்தவரெனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.இதேவேளை, இலங்கை அரசாங்கமும் சரி, புலிகளும் சரி இரு தரப்பினருமே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகவில்லையென தங்களுக்கு அறிவித்திருப்பதாக நோர்வே அனுசரணையாளர்கள் தெரிவித்திருக்கும் அதேநேரம், போர் நிறுத்த உடன்படிக்கையென்பது தவறுதலாக இடம்பெற்றதொரு விடயமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
posted by Norsri @
Wednesday, February 21, 2007
கொழும்பில் 64 பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமான தமிழர்கள் கைது,
04 February 2007
கொழும்பில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் இலங்கையின் 59 ஆவது சுதந்திர தின பாதுகாப்பிற்கான முன்னோடி நடவடிக்கையாகவே சந்தேகத்திற்கிடமானவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டாம் வீதி, சோனகத் தெரு, ஆட்டுப்பட்டித் தெரு, குணசிங்புர, செட்டித்தெரு, கதிரேசன் வீதி, சென்ட்ரல் வீதி பகுதிகளிலுள்ள தங்குமிடங்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா மேட்டுத்தெரு, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி போன்ற இடங்களிலிருக்கும் தங்குமிடங்கள் ஆகியவற்றையும் கொழும்பு புறநகர் கிருலப்பனை ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, முகத்துவாரம், கிரேண்ட் பாஸ், தெமட்ட கொடை, மருதானை ஆகிய பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இடங்களும் தங்குமிடங்களும் சுற்றி வளைப்பு தேடுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுகள் இடம்பெற்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் தாம் கொழும்பிற்கு வந்து தங்கி இருப்பதற்காக தகுந்த ஆதாரங்கள் தங்களை அடையாளப்படுத்தும் அடையாள அட்டை உட்பட்ட அரசாங்கம் வழங்கியுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த நிலையிலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த கைதுகள் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை இடம்பெற்றுள்ளதுடன் சிலர் இரவு உடைகளுடனும் அரைகுறை ஆடைகளுடனும் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதாகியுள்ளவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்ல வந்திருந்தவர்களாவர். மேலும் சிலர் திருமணங்கள், கல்வி நடவடிக்கைகள், இந்தியா செல்வதற்கு, மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள மற்றும் தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வந்து தங்கி இருந்தவர்களாவர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட மலையகம் மற்றும் அண்மைக் காலத்தில் தென்பகுதியிலிருந்து கொழும்புக்கு வந்திருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்கென கூறி சந்தேகத்தின் பேரில் அப்பாவி தமிழர்களை கைது செய்துள்ள பொலிஸாரின் நடவடிக்கை தமிழர்கள் மத்தியில் சுதந்திரத்தை தட்டிப் பறிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறினர். கைதானவர்களின் விடுதலைக்கு உதவுமாறு தமிழ் அரசியல் வாதிகளிடம் கோரிக்கைகளையும் அவர்கள் விடுத்துள்ளனர்.
இக் கைது நடவடிக்கைகள் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸாரிடம் கேட்ட போது சுதந்திர தின வைபவங்களை குழப்பியடிக்கும் நோக்கில் கொழுற்பிற்குள் ஊடுருவியுள்ள புலிகள் மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி சந்தேகத்திற்கிடமான 63 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இவர்களில் ஏராளமானோர் தங்குமிடங்களில் வைத்தே கைதாகியுள்ளார்.
குறிப்பிட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளுக்கு கொழும்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் நால்வர் தலைமை தாங்கியுள்ளனர்.
posted by Norsri @
Sunday, February 04, 2007
ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் - வாகரையில் ஜனாதிபதி அறிவிப்பு;
ஆயுதங்களை கையளித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் அரச படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள வாகரைக்கு நேற்றுக்காலை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளை மடக்கி பொதுமக்களை விடுவிக்கப்போவதாக சூளுரைத்திருக்கும் அதேசமயம், சமாதானப் பேச்சை ஆரம்பிப்பதற்கு கதவுகள் தற்போதும் திறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
வாகரை விஜயத்தின்போது ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் தீர்வுத் திட்டத்தை புலிகளுக்கு வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதக் கையளிப்பை ஆரம்பிக்க வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
"ஆயுதங்களை சரணடையச் செய்வதை அவர்கள் ஆரம்பித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருவது அவசியம். பயங்கரவாதிகளிடமிருந்து நாம் பொதுமக்களை விடுவித்திருக்கிறோம். புலிகளை நாம் மடக்க வேண்டியுள்ளது. பொதுமக்களை விடுவிக்க இரு வழிமுறைகள் உள்ளன. நாங்கள் அரசியல் தீர்வை முன்வைக்கவுள்ளோம். இராணுவத் தீர்வை விரும்பவில்லை. மக்களைக் கொன்று தமது ஆயுதபலத்தை காட்டுவதற்கு முயற்சிக்காமல் பேச்சு மேசைக்கு அவர்கள் வரவேண்டிய முக்கியமான தருணம் இதுவாகும். அவர்களை (புலிகளை) பேச்சுவார்த்தை மேசைக்கு வர வழைக்க என்னால் முடிந்தளவுக்கு நான் முயற்சிப்பேன். இது எனது கடமை. அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அவர்களுடன் பேச்சுக்கு தயாராக இருக்கிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், பொது மக்களில் ஒருவருக்குக் கூட உயிரிழப்பு இல்லாமல் அந்தப் பகுதியில் விடுவித்ததற்காக படையினருக்கு நன்றி தெரிவிக்கவே தான் அங்கு வருகை தந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.
அத்துடன், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை வரவழைத்து அவர்களின் அரசாங்கங்களும் மக்களும் நிதியை அனுப்பியிருந்ததால் அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை காண்பிக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததுடன் அடுத்த இரு வாரங்களுக்குள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை ஆரம்பித்து பொது மக்கள் திரும்பி வருவதற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.
தளபாடங்களைப் பெற்று முழு அளவிலான அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றும் வீடுகளை நிர்மாணிக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
புலிகள் ஜனநாயக வழிக்கு வருவதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என்றும் `யுத்த நிறுத்தம்' யுத்த நிறுத்தமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதேவேளை , கொழும்பிலிருந்து காலை 8.30 மணிக்கு 5 ஹெலிகொப்டர்களில் வாகரைக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகத்தில் பொதுமக்களையும் சந்தித்துள்ளனர்.
இங்கு ஜனாதிபதிக்கு இந்து மத முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அங்கு இருந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்துவதுடன், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மீள்குடியேற்றத்திற்கு சகல வித ஒத்துழைப்புகளையும் அரசு வழங்குமென்றும் மக்களை அச்சமின்றி மீளக்குடியேற்றலாமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீனவர்களுக்குரிய படகுகளை பெற்றுக்கொடுக்குமாறும் அவர்களின் தொழில் நடவடிக்கைகள் மேம்பட உதவுமாறும் அமைச்சர்களிடம் பணித்துள்ளார்.
பின்னர் வாகரை பொலிஸ் நிலையம் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு பொலிஸாருடன் கலந்துரையாடியதுடன், மக்களுடன் சிநேகபூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, வாகரை வைத்தியசாலைக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் வைத்தியர்களுடன் வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேநேரம், ஜனாதிபதி வாகரையை புலிகளிடமிருந்து மீட்பதற்கான படை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அவர்களுக்கு சுதந்திரதின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வாகரையிலிருந்து சம்பூருக்கு சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் அங்கு வெளிச்ச வீட்டை பார்வையிட்டுள்ளதுடன் அங்குள்ள கடற்படை தளத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
சம்பூர் அதனையொட்டிய பகுதிகளை மீட்பதில் பங்காற்றிய படை வீரர்கள் மற்றும் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன், சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சம்பூரிலிருந்து மின்னேரியா இராணுவ முகாமுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்குள்ள படைவீரர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியுடனான இவ்விஜயத்தில் அமைச்சர்களான நிமால் சிறிபால டீ சில்வா, றிஷாத் பதியுதீன், அமீர் அலி, பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், முப்படைத்தளபதிகள், பாதுகாப்பமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இவ்விஜயங்கள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை எனவும் அவ்வாறே வாகரையை சென்றடையும் வரை சில அமைச்சர்களுக்கு தாம் எங்கு செல்கிறோம் என்ற விபரம் கூட அறிவிக்கப்படவில்லையென அறியவருகிறது.
posted by Norsri @
Sunday, February 04, 2007
வானத்தில் காமராக்கள் பல வலம்வருவது...
10 January 2007
உங்கள் வீட்டுக்குப் பின்னால் நீங்கள் புதிதாக ஒரு அறை கட்டுகிறீர்கள். வானில் சுமார் 600 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கிற ஒரு செயற்கைக்கோள் நீங்கள் புது அறை கட்டியுள்ளதைப் படம் பிடித்துக் காட்டி விடலாம். வயலாக இருந்த இடத்தில் புதிதாக மாவு மில் அதையும் அந்த செயற்கைக்கோள் படம் பிடித்துவிடும். ஒரு நகருக்கு அருகே புதிதாக குடிசைப் பகுதிகள் முளைக்குமானால் செயற்கைக்கோள் படம் மூலம் அதைத் தெரிந்து கொண்டுவிடலாம்.
வானில் இந்தியா செலுத்துகிற கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளில் இடம் பெற்றுள்ள காமிராக்கள் அந்த அளவுக்குத் துல்லியமாகப் படம் எடுக்கும் திறன் படைத்தவை. ஒரு மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட எந்தப் பொருளையும் இது படம் பிடித்து விடும். இது ஒரு மீட்டர் தெளிவுத் திறன் (One Meter Resolution எனப்படும்.
வானிலிருந்து படம் பிடித்து அனுப்புவதற்கென அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் முதலான நாடுகள் மற்றும் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் ஆகியவை செயற்கைக்கோளை உயரே செலுத்தியுள்ளன. எனினும் எந்த அளவு தெளிவான படங்களைப் பிடிக்கின்றன என்பதில் இவற்றின் இடையே வித்தியாசம் உண்டு. உதாரணமாக பிரான்ஸின் சமீபத்திய "ஸ்பாட்' செயற்கைக்கோளினால் 2.5 மீட்டருக்கு மேல் உள்ள பொருளை மட்டுமே படம் பிடிக்க இயலும். "ஐகோனாஸ்' என்னும் அமெரிக்கத் தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் கார்ட்டோசாட்-2 போலவே ஒரு மீட்டர் தெளிவுத் திறன் கொண்டது. ஆனால் குவிக்பர்ட் எனப்படும் செயற்கைக்கோளின் தெளிவுத் திறன் 60 செண்டிமீட்டர்.
வேறு விதமாகச் சொல்வதானால் இந்த விடயத்தில் உலகிலேயே மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கிற செயற்கைக்கோள்களில் கார்டோசாட்-2 இரண்டாவது இடம் வகிப்பதாகச் சொல்லலாம். இந்தியா 1979-ஆம் ஆண்டில் தொடங்கி வானிலிருந்து படம் எடுக்கும் செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. முதல் இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் பாஸ்கரா என்று பெயர் வைக்கப்பட்டது. 1988-ல் தொடங்கி இவை ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவில் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் எனப்படுகின்றன.
வானிலிருந்து படம் பிடிக்கிற செயற்கைக்கோள்கள் பொதுவில் பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுபவை. இவை கீழே பூமியில் நிலப் பகுதியிலும், கடல் பகுதியிலும் உள்ள அனைத்தையும் படம் பிடித்துக்காட்டுபவை.
குறிப்பிட்ட பிராந்தியத்தில் பயிர்களை பூச்சி தாக்கியுள்ளதா? மழையால் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனவா? சுனாமி போன்ற பேரழிவின் போது பாதிப்பு எவ்வளவு? காடுகளின் நிலப்பரப்பு குறைந்து வருகிறதா என எண்ணற்ற தகவல்களை இந்த செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஐ.ஆர்.எஸ் வகையைச் சேர்ந்த 6 செயற்கைக்கோள்கள் இப்போது உயரே செயலில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தினமும் முற்பகலில் குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தியாவுக்கு நேர் மேலே பறந்தபடி தெற்கு நோக்கிச் சென்றவாறு படம் பிடித்து அனுப்பும். இவை ஒவ்வொன்றும் ஒரு சமயத்தில் இந்திய நிலப்பரப்பின் குறிப்பிட்ட பகுதியை நீண்ட பட்டை போல படம் பிடிக்கும். இப்படியான படங்களை பக்கம் பக்கமாக வைத்தால் இந்தியாவின் முழுப் படம் தெரியும்.
இந்த வகை செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றுகிற அதே நேரத்தில் பூமி தனது அச்சில் சுழன்று கொண்டிருக்கும். ஆகவே ஐ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் ஒன்று கீழே இந்தியாவின் ஒரு பகுதியை படம் பிடித்து பின்னர் 5 நாள் கழித்துத்தான் அப் பகுதி மீதாக வரும். இதனை மனதில் கொண்டு இந்தியாவுக்கு மேலே பல செயற்கைக்கோள்கள் எப்போதும் வானில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பலனாக நாட்டின் எல்லாப் பகுதிகளும் தினமும் படம் பிடிக்கப்படுகிறது.
எனினும் இப்போதைய கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளின் பிரதான நோக்கம் நாட்டின் பல பகுதிகளின் துல்லியமான மேப்புகளைத் தயாரிப்பதற்கான வகையில் படங்களை அளிப்பதாகும். ஜி.பி.எஸ். டெலிபோன், குரூஸ் ஏவுகணை ஆகியவை வந்த பின்னர் குறிப்பாகப் பாதுகாப்புத் துறையினருக்கு மிகத் துல்லியமான மேப்புகள் தேவைப்படுகின்றன.
posted by Norsri @
Wednesday, January 10, 2007
சம்பூரில் மின் நிலையம் அமைக்கும் அரசின் முயற்சியை ததேகூ கண்டிப்பு.
28 December 2006
சம்பூரில் அவசர அவசரமாக அனல் மின்நிலையத்தை நிறுவ அரசு மேற்கொண்டுவரும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசு எடுத்திருக்கும் இத்தீர்மானம் பிழையானது என்றும் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகவே அரசு இவ்வாறு செயற்படுகிறது என்றும் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கருத்துக் கூறுகையில்,
11 ஆயிரம் தமிழ் மக்கள் வாழ்ந்த இடம் சம்பூர். அந்த மக்களைத் திட்டமிட்டு விரட்டி விட்டு அந்த இடத்தை அரசு ஆக்கிரமித்துள்ளது.
விரட்டப்பட்ட மக்கள் இப்போது அகதி முகாம்களில் சீரழிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மீண்டும் சம்பூரில் வந்து குடியேறாதவாறு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதற்காகவே அவசர அவசரமாக அங்கு அனல் மின்நிலையத்தை நிர்மாணிக்க அரசு தீர்மானித்துள்ளது. அரசு பொருத்தமில்லாத நேரத்தில் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் அரசு எம்மிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை. காயப்பட்ட தமிழ் மக்களின் துயரை ஆற்று வதற்குப்பதிலாக அவர்களை மேலும் மேலும் காயப்படுத்தவே அரசு முனைகிறது.
அரசின் இத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவது பற்றி அரசு உடனடியாக மீள் பரிசோதனை செய்ய வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
posted by Norsri @
Thursday, December 28, 2006
தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளது - ஜெயானந்தமூர்த்தி
24 December 2006
வடகிழக்கு மாகாணத்தை பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிருவாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவென்றே மாகாணசபை முறைமை சிறிலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1987 ஆம் ஆண்டு அப்போதைய சிறிலங்கா ஐனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்திய பிரதமர் ராஐPவ் காந்தியும் செய்து கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இதன்பிரகாரம் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது.
ஆனால் அந்த மாகாணசபை திட்டம்கூட யாருடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டதோ அதன்படி தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்குவம் வகையில் அது செயற்படவில்லை. மாறக சிறிலங்காவில் வடகிழக்கு மாகாணத்தைத் தவிர எனைய பகுதியில்தான் அது சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் வடகிழக்கு மாகாணசபைக்கு சிங்கள ஆளுனர் நியமிக்கப்பட்டு சிறிலங்கா அரசின் நேரடி கண்காணிப்பில் அது இயங்கியதுடன் தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாசசைகளையும் இம்மாகாணசபை நிறைவேற்றவில்லை. இதனால் மாகாணசபை முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தனர்.
இந்த வகையில் வடகிழக்கு தாயகத்தை கூறு போடும் சிங்கள பேரினவாதத்திட்டத்தின் படி ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் அனுசரணையுடன் வடகிழக்கு மாகாணம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டு தற்போது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு எதிர்வரும் ஐனவரி மாதத்துடன் நிருவாக அலகுகள் இயங்கவுள்ளன. எனினும் கிழக்கு மாகாணத்திலிருந்து திருகோணமலை மாவட்டம் தனி அலகாகப் பிரிக்கப்பட்டு தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழர் தாயகத்தைத் துண்டாடும் பாரிய சதி என்பதுடன் தமிழர் தாயகத்தின் தலைநகரை சிங்கள மயமாக்கும் ஒரு நடவடிக்கையாகவும் உள்ளது.
சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுடன் திருகோணமலை மாவட்டத்தை எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்துடன் இணைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் சிறிலங்கா அரசு தற்போது அவசர அவசரமாக வடகிழக்கு மாகாணத்தைத் துண்டாடி மூன்று நிருவாக அலகுகள் அமைத்துள்ள நடவடிக்கையானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய இனப்பிரச்சினைத் தீர்வானது இதனால் இன்னும் மோசமடையக் கூடிய நிலையே தோன்றும் என்பதுடன் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிரதான சக்தியான இந்தியாவின் நோக்கத்தையும் சிதறடிக்கும் செயலாகவும் உள்ளது. ஏனெனில் வடகிழக்கு மாகாணம் இணைந்திருக்க வேண்டும் என்பதையே தற்போதும் இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சிறிலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவிடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் தமிழ் மக்களின் எந்தவொரு கருத்தையும் கேட்டறியப்படாமல் இவ்வாறு வடகிழக்கு மாகாணம் கூறுபோடப்படுவதை தமிழ் மக்கள் முற்றாக எதிர்த்துள்ளதுடன் கிழக்கு மாகாண மக்கள் இணைந்த வடகிழக்கு தாயகமே தமது பூர்வீகத்தாயகம் என்பதில் உறுதியாக உள்ளதுடன் வடகிழக்கு இணைந்தே இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.
posted by Norsri @
Sunday, December 24, 2006
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள்
16 December 2006
தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன.
அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும்.
வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்:
Alexandra Palace
Alexandra Palace Way
Wood Green
London N22 7AY
விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்தின் விடியலை தரிசனமாகக் கொண்ட தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வித்துடலுக்கு மலர் தூவி வணங்குவோம் வாருங்கள்.
posted by Norsri @
Saturday, December 16, 2006
தமிழர் தாயகத்தில் மூன்று நாள்களுக்கு தேசிய துக்கதின
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவை யொட்டி தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் இன்று முதல் மூன்று நாள்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என நேற்றிரவு வன்னியில் அறிவிக்கப்பட்டது.
இத்தினங்களில் கோலாகல கொண்டாட்ட நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு மௌனாஞ்சலிகள், இரங்கல் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட் டது.
posted by Norsri @
Saturday, December 16, 2006
பாலாண்ணைக்கு "தேசத்தின் குரல்" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு
எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டு நிரப்பமுடியாத பேரிழப்பு.பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனித வாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிர்ஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.பழக ஆரம்பித்த நாள் முதலே எமக்கிடையே ஒரு இனம்புரியாத புரிந்துணர்வு ஏற்பட்டது. அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்துகொண்டு, எமது உறவு நல்லுறவாக வளர்ந்து நட்புறவாகப் பரிணமித்தது. சிந்தனையாலும் செயலாலும் ஒன்றுபட்ட மனிதர்களின் சங்கமமாக அந்த உறவு மலர்ந்தது. தினம்தினம் நாம் பகிர்ந்துகொண்ட வாழ்பனுபவத்தில் வலிமைபெற்று வளர்ந்தது. சாதாரண மனித உறவுகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. காலத்தால் கனிந்து, வரலாற்றால் வடிவம் பெற்ற ஒரு அலாதியான இலட்சிய உறவு அது.பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன். மோசமாகச் சுகவீனமுற்று தினம்தினம் சாவோடு போராடியபோதும், தாங்கமுடியாத உடல் உபாதைகளால் வருந்திய போதும், தளர்ந்து போகாத உறுதிப்பாடு அவரிடம் இருந்தது. அவரின் இந்த இலட்சிய உறுதி எனது நெஞ்சத்தைத் தொட்டுநின்றது. அவர் துன்பத்தால் துவண்டபோதெல்லாம் எனது ஆன்மாவும் கலங்கியழுதது.எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கிறது. ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர். எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பழுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும் வேதனைகளையும் சவால்களையும் சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல் இராஜதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக, முன்னால் நின்று செயற்பட்டவர்.ஈழத்தமிழினம் பெருமை கொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து "தேசத்தின் குரல்" என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
posted by Norsri @
Saturday, December 16, 2006
இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு அரசியல் தீர்வே..
29 November 2006
இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வே என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கருத்தை ஐக்கிய தேசிய கட்சி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் சகல இன மக்களின் அபிலாசைகள் தீர்க்கப்படும் வகையில், அரசியல் தீர்வு அமைய வேண்டும். பெரும்பான்மையான தமிழ் மக்களின், ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றையே எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும், வன்முறைகள் பரவி வருவதுடன், வட கிழக்கில் வாழும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கடந்த ஜனாதிபதி தேர்தலில், வட கிழக்கு மக்கள் தமது வாக்கை பயன்படுத்துவதை தடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தடுக்கப்பட்டது. அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தால், 2002 2003 ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சமாதான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இணைத்தலைமை நாடுகள் கூறியுள்ளது போல் மனிதாபிமான விடயங்களை அரசியல்படுத்தாமல், அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்திற்காக சகல கடல் மற்றும் தரை வழிப்பாதைகளை திறக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
posted by Norsri @
Wednesday, November 29, 2006
ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு.
26 November 2006
ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன்
ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து: நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும்.எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் நாம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினோம். ஒரே ஒரு வாகனத் தொடரணிக்காக நாங்கள் ஏ-9 பாதையை திறக்க முடியாது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் திறக்கமாட்டோம். ஐ.நாவே கேட்டுக்கொண்டாலும் திறக்க முடியாது. யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தொடர்ச்சியாக உணவுப் பொருட்கள் விநியோகம் சென்றடைய வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் இளந்திரையன்."ஏ-9 பாதையை திறந்து உணவுப் பொருட்கள் வாகனத் தொடரணியை அனுப்புவது குறித்து சிறிலங்கா சமாதான செயலகத்தினருடன் ஆலோசனை நடத்தினோம்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் தெரிவித்தார்
posted by Norsri @
Sunday, November 26, 2006
உணவுப் பொருட்கள் முற்றாக தீர்ந்தன...
யாழ்குடாநாட்டில் வணிக நிலையங்களில் ஒருவாரத்திற்கு போதுமான உணவுப்பொருட்கள் இருப்பதாகவும் குடாநாட்டின் களஞ்சியங்களிலும், கூட்டுறவு சங்கங்களிலும் உணவுப்பொருட்கள் முற்றாக தீர்ந்துள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் குடாநாட்டிற்கான உணவுப்பொருட்களை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பத்தவறின் மக்கள் ஒருநேர உணவை கூட உட்கொள்ளமுடியாது என மனிதநேய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இதேவேளை குடாநாட்டில் தற்போது விநியோகிக்கப்படும் தேயிலை பாவனைக்கு உகந்தவை அல்ல எனவும் இவற்றை அருந்துவோர் புற்றுநோய்க்கு உள்ளாக நேரிடுவர் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
posted by Norsri @
Sunday, November 26, 2006
நாடாளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு
24 November 2006
சிறீலங்கா டெலிகொம் நிறுவன பணியாளர்கள் வேதன உயர்வு உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து; இன்று நாடாளாவிய ரீதியில் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்பணிபுறக்கணிப்பில் 20 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களான சுமார் ஏழாயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெலிகொம் நிறுவன பணியாளர்களின் பாவனையாளர்களுக்கான அன்றாட பணிகள் யாவும் இன்று முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
posted by Norsri @
Friday, November 24, 2006
சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் பாதிப்பு..
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஐித சேனாரட்ன நாடாளுமன்றத்தில் யுத்தம் காரணமாக ஊடக சுதந்திரம் பெருமளவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊடக துறை அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உiராயாற்றும் போது நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் ஊடக சுதந்திரத்தை நிலை நிறுத்த வேண்டும் என அவர் சுட்டிகாட்டினார்.
posted by Norsri @
Friday, November 24, 2006
தேசிய விருதுக்கு ஈ படம்,
23 November 2006
ஜீவா, நயன்தாரா நடித்த ஈ படம் தீபாவளிக்கு ரிலீசானது. இந்த படத்துக்கு கூடுதல் பெட்டிகள் கேட்டு வினியோக தரப்பில் வற்புறுத்தப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக 25 பிரிண்ட்கள் போட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி முடிவு செய்துள்ளார். தேசிய விருதுக்கு ஈ படத்தை அனுப்பப்போவதாகவும் அவர் கூறினார்.ஈ படத்தில் வித்தியாசமான கேரக்டர் பண்ணியதற்காக பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிவதாக ஜீவா தெரிவித்தார். திரையுலகில் தனக்கு திருப்புமுனையை ஈ படம் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.ஈ படத்தில் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பெரிய 10 நடிகர்கள் பட்டியலில் ஜீவா இடம்பிடித்துள்ளார் என்று டைரக்டர் ஜனநாதன் கூறினார். ஈ படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
posted by Norsri @
Thursday, November 23, 2006
சிவாஜி படப்பிடிப்பு: ரஜினி, ஸ்ரேயா அமெரிக்கா பயணம்
21 November 2006
ரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது
. 50 சதவீதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிந்துள்ளது. புனேயில் நயன்தாராவின் நடன காட்சி படமாக்கப்பட்டது. அத்துடன் கல்லூரி காட்சிகளும் எடுக்கப்பட்டன.கதைப்படி அமெரிக்காவில் வாழும் கோடீசுவர இந்தியரின் மகனான ரஜினி தமிழக மக்களுக்கு சேவை செய்ய பணத்துடன் வருகிறார். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி உதவி செய்கிறார். ஏழைகளுக்கு இலவச கல்வி கொடுக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகிறார். அவர் மீது எரிச்சல்படும் அரசியல் வாதிகள் பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சொத்துக்கள் பறிபோகிறது. ஏழையா கும் அவர் மீண்டும் பணக்கார ராகிறார்.சிவாஜிக்காக புனேயில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனங்களில் சிவாஜி யுனிவர்சிட்டி கல்லூரி என்றெல்லாம் பெயர் பலகைகள் வைத்து ஆடம்பரமாக படமாக்கப்பட்டது.கல்லூரியை ரஜினி திறப்பது போல் காட்சிகள் எடுக்கப்பட்டன. மாணவர்களை அந்த கல்லூரியில் ரஜினி சேர்த்து இலவசமாக படிக்க வைக்கும் காட்சிகளும் எடுக்கப்பட்டுது. அடுத்த கட்டமாக அமெரிக்காவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.சிவாஜியில் ரஜினிக்கு இரட்டை வேடம் தந்தை, மகன் கெட்டப்பில் நடிக்கிறர். தந்தை கேரக்டர் அமெரிக்காவில் தொழில் அதிபராக இருப்பது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தந்தை கெட்ப்புக்காக ரஜினி நடித்த பழைய படங்களின் ஸ்டில்களை டைரக்டர் ஷங்கர் பார்த்து அதிலிருந்து தலையில் வகிடெடுத்துள்ள தோற்றத்தை தேர்வு செய்துள்ளார். அதே கெட்டப்பில் தந்தை பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படுகின்றன. டூயட் பாடல் காட்சியும் படமாக்கப்படுகிறது.இதற்காக ரஜினி, ஸ்ரேயா, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்கள்.சிவாஜி படத்தில் பிரபு தேவா நடன பயிற்சி அளித்துள்ளார். 10 நாட்கள் இந்த நடன காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. ரஜினி வளைந்து நெளிந்து அபாரமாக ஆடி நடித்ததாக பிரபுதேவா கூறினார்.வில்லன் பாத்திரத்தில் சுரமன் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ரஜினி நண்பராக ரகுவரன் நடிக்கிறார். ரகுவரன் நடிக்கும் காட்சிகளும் புனேயில் படமாக்கப்பட்டு விட்டது.சிவாஜி படத்தில் ரஜினி அறிமுக பாடல் ஒன்று இடம்பெறுகிறது. எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த பாடல் காட்சியும் புனேயில் படமாக்கப்பட்டது. 5 ஆயிரம் துணை நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவையும் இப்பாடல் காட்சியில் படமாக்கப்பட்டது.சிவாஜி படத்தில் ரஜினி உடுத்தும் ஆடைகள் இதுவரை இல்லா அளவிற்கு மிகவும் வித்தியசமாகவும், ஸ்டைலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ஐஸ்வர்யாராய், ப்ரீத்தாஜிந்தா, ராணிமுகர்ஜி போன்ற பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருப்பவரான மணிஷ் சிவாஜி படத்திற்கு அடை ஆலங்காரம் செய்கிறார்.
posted by Norsri @
Tuesday, November 21, 2006
ஜேம்ஸ்பாண்ட் படம் ரூ.400 கோடி வசூல்..
ஜேம்ஸ்பாண்ட் படம் ரூ.400 கோடி வசூல்: திரையிட்ட 3 நாளில் சாதனை
ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு 3 நாளில் ரூ. 400 கோடி வசூலாகியுள்ளது. உலக சினிமா ரசிகரக்ளின் நிஜ ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் பிரிட்டீஷ் எழுத்தாளர் பிளமிங் 1953ல் தனது நாவலில் இந்த பாத்திரத்தை புகுத்தினார்.ஜேம்ஸ்பாண்ட் கதைகளுக்கு உலகெங்கும் வரவேற்பு அதிகரிக்க அந்த கேரக்டர் சினிமாவில் புகுத்தப்பட்டது.முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் டாக்டர் நோ ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் சீன்கானரி நடித் தார். அந்த படம் வசூலை வாரி குவித்தது.இதுவரை 20 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் சீன்கானரி ஜார்ஜ் வாசன் பை, ரோஜர்மூர், டி மோத்திடால்டன், தியர்ஸ் பிரஸ்னன் ஆகிய 5 பேர் ஜேம்ஸ்பாண்ட் வேடமேற்று நடித்துள்ளனர். சீன்கானரி, ரோஜர்மூர், பியர்ஸ் பிரஸ்னன் ஆகிய மூவரும் ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தினர்.முதல் படத்தில் இருந்து இன்று வரை ஜேம்ஸ்பாண்ட் அறிமுகம் அமர்க்களமாக இருக்கும். பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் என் அவர் தன்னை ஸ்டைலாக அறிமுகப்படுத்தும் சீன் பிரபலம்.முந்தைய படங்களை போல்வே 4 ஆண்டு இடை வெளிக்கு பின் கடந்த 17-ந்தேதி வெளியான கேஸினே ராயல் ஜேம்ஸ்பாண்ட் படமும் சக்சை போடு போடுகிறது.தீவிரவாதிகளை மைய மாக வைத்து இப்படம் எடுக்கப் பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு பணம் எங்கிருந்து சப்ளை ஆகிறது என்பதை ஜேம்ஸ் பாண்ட் துப்பறிகிறார். கேசினோ ராயல் என்ற சூதாட்ட கிளப்பில் இருந்து கோடி கோடியாய் பணம் அனுப்பப்படுவதை கண்டு பிடிக்கிறார். அங்கு சூதாட்டம் ஆடும் கில்லாடி தீவிரவாதி ஆட்டத்தில் ஜெயித்து கோடி கோடியாய் பணத்தை பயங்கரவாதிகளுக்கு அனுப்பு கிறான்.அவனை வீழ்த்த ஜேம்ஸ் பாண்ட் ஆட்டத்தில் குதிக்கிறார். முதலில் வில்லனிடம் தோற்று 70 கோடிக்கு மேல் தோற்கிறார். பிறகு கடைசி ஆட்டத்தில் ஜெயித்து வட்டியும் முதலுமாய் 600 கோடி ரூபாய் ஜெயித்து எதிரியை வீழ்த்துகிறார்.உலகம் முழுவதும் இப் படம் ஒரே நாளில் ரிலீசாகி பரபரப்பாக ஓடுகிறது. 650 கோடி ரூபாய் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டது. திரையிட்ட 3 நாளில் 400 கோடியை வசூலித்துள்ளது. வசூலில் முந்தைய ஜேம்ஸ்பாண்ட் படங்களை இது முறியடிக்கும் என்று விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள்.
posted by Norsri @
Tuesday, November 21, 2006
சர்வதேச விமானநிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்து...
20 November 2006
நேற்று சிறிலங்கா ஜனாதிபதியால் 250 கோடி ரூபா செலவில் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்துக்குரிய அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த விமானநிலையம், ஆயிரத்து 150 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பிரதேசத்தில், நான்கு கிலோ மீட்டர் நீளமான ஓடுபாதைகளைக் கொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் எதிர்வரும் 2009 ம் ஆண்டளவில் நிறைவடையவுள்ளன
posted by Norsri @
Monday, November 20, 2006
பிரதான செய்திகள்
வடிவேலுக்கு ஐந்தாண்டு தடை
வைகைப்புயலின் வேகம்...
நான் கடவுள்: பிரமிக்க வைக்கும் பாலா!
நான் பாலாவின் ரசிகன் - மணிரத்னம்
ரஜினியின் சுல்தான்!'சிவாஜி' படத்தின் சாதனையை முறிய...
மக்களுக்காகவே படம் இயக்குகிறேன்" - மணிரத்னம்
தசாவதாரம் பட பிரச்சினையில் என்னை வீழ்த்த கட்ட பஞ்ச...
பெப்ரவரி 21 இல் இணைத் தலைமைகளின் தொலைத் தொடர்பு மா...
கொழும்பில் 64 பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமான தமி...
ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் - வா...
பெட்டகம்
October 2006
November 2006
December 2006
January 2007
February 2007
April 2007
November 2007
December 2007
January 2009
May 2011
இணையசெய்திகள்
நிதர்சனம்
தமிழ்நாதம்
பதிவு
அதிர்வு
யாழ் இணையம்
நெருடல்
ஈழம் நியூஸ்
சங்கதி
வெப் உலகம்
இணையம்
தொலைக்காட்சிகள்
தீபம்
ரிவி ஐ
லங்காஸ்ரீ ரிவி
சக்தி ரிவி
தமிழ் விசன்
சிகரம் ரிவி
தமிழ் ரிவி
வானொலிகள்
ஐ.பி.சி தமிழ்
புலிகளின் குரல்
உலகத் தமிழோசை
சக்தி எஃப்.எம்
கனேடிய தமிழ் வானொலி
அவுஸ்திரேலிய தமிழ் ஒ..கூட்டு..
தாளம்
குழந்தைப் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தமிழ் பெயர்கள்
தொழில்நுட்பம்
vaddakkachchi
technocadd
java sun
wntechnology
பாடசாலை தளங்கள்
ஹாட்லி கல்லூரி
யாழ். இந்துக் கல்லூரி
திருகோணமலை இந்துக்
kokuvilhindu
Universities
stpatrickscollege
Jaffna Hindu
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
அறுசுவை
MP3 பாடல்கள்
MP3
MP3
MP3
MP3
திருமண தளங்கள்
திருமண தளங்கள்
குழந்தைகளுக்கானபக்கம்
தமிழ் கற்பதற்கு
தமிழ் கற்பதற்கு
கவிதைகள்
kavimalar
kavithai
தமிழ் சஞ்சிகைகள்
வீரகேசரி
உதயன்
ஈழநாடு
சுடர் ஒளி
நக்கீரன்
சினிமா பக்கங்கள்
சினிமாமலர்
தமிழ் சினிமா
சினிமா சௌத்
இம்சை அரசன்
சமூக இணைப்புகள்
தமிழ்ச் சமூகம்
தமிழ் Stepith
நடிகர்கள் தளங்கள்
vikram
Surya
Arjun
Vijaykant
Vijay
Ajith >
விளம்பரம்
கம்ப்யுட்டர் கல்வி
இணைய மொழி
இன்டர் நெட்
நான் பார்ப்பவை
© proudly powered by 2006.
norsri.blogspot.com
நீங்கள் இந்த வலைக்கு
பார்வையாளராக வருகை நன்றி.